
பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் தலைவியானார் சரோஜா சாவித்திரி
பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தலைமையில் முதல் தடவையாகப் பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை கூடியது.
இதன்போது பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் புதிய தலைவியாக பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவுசெய்யப்பட்டார்.
மேலும், பெண் பாராளுன்ற ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர்களாக பாராளுமன்ற உறுப்பினர் சமிந்திரானி பண்டார கிரிஎல்லே, பாராளுமன்ற உறுப்பினர் சமன்மலி குணசிங்க ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
இங்கு கருத்துத் தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய குறிப்பிடுகையில், பொதுமக்களின் வாக்குகளால் குறிப்பிடத்தக்க வீதமான பெண்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவுசெய்யப்பட்டிருப்பது சிறந்த வெற்றியாகும். எனவே, அரசியல் வேறுபாடுகள் இன்றி பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம் செயற்பட வேண்டியது அவசியம் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
அனைத்துப் பெண்களுக்கும் பாதுகாப்பான நாட்டை உருவாக்குவது ஒன்றியத்தின் நோக்கம் என ஒன்றியத்தின் தலைவி அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
