பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இளஞ்சிவப்பு நிற ஆடைகளை அணிய தீர்மானம்

அடுத்த நாடாளுமன்ற வாரத்தில் ஒரு குறிப்பிட்ட நாளில் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வை ஆதரிப்பதற்காக அனைத்து பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்ற ஊழியர்களும் இளஞ்சிவப்பு நிற ஆடைகளை அணிய தீர்மானித்துள்ளனர்.

மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என்றும் அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

உலகளாவிய மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு, பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவிற்காக, மார்பகப் புற்றுநோய் தடுப்பு மற்றும் தொடர்புடைய திட்டங்கள் குறித்த சிறப்பு விழிப்புணர்வு அமர்வு சமீபத்தில் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டம், தற்காலிகமாக நாடாளுமன்றக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சமன்மலி குணசிங்கவின் தலைமையில் நடைபெற்றது.

குறித்த அமர்வில், தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் இயக்குநர், பிற மருத்துவ நிபுணர்களுடன் சேர்ந்து, மார்பகப் புற்றுநோய் தடுப்பு குறித்து பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவிற்கு விளக்கமளித்தார்.