பெண் ஒருவரை வன்புணர்வுக்கு உட்படுத்தி காணொளி பதிவு செய்த மதபோதகருக்கு ஆயுள் தண்டனை!
இந்தியாவில் பெண் ஒருவரை வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் மதபோதகர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து அந்த நாட்டு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவின்,பஞ்சாப் மாநிலத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
2018 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த சம்பவத்தின் தீர்ப்பு 7 வருடங்களுக்குப் பின்னர் வழங்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
மதபோதகர் ஒருவர் தம்மை வன்புணர்வுக்கு உட்படுத்தியதாகவும், அந்த செயலைக் காணொளியாக பதிவு செய்து அச்சுறுத்தி வந்ததாகவும் குறித்த பெண் முறைப்பாடளித்துள்ளார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மதபோதகர் பிரபலமான நபர் ஒருவர் என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை இந்த மதபோதகர் மீது மேலும் இரு பெண்கள் முறைப்பாடளித்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
இவர் ஏற்கனவே சிறையில் இருந்தவர் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.