பெண்ணொருவரிடமிருந்து 15 இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையிட்ட சந்தேகநபர் கைது!

பாணந்துறை பிரிவுக் குற்ற விசாரணைப் பணியகத்தின் அதிகாரிகள், பெண்ணொருவரிடமிருந்து 15 இலட்சம் ரூபா பணத்தைக் கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.

கடந்த ஜனவரி 15ஆம் திகதி பெண்ணொருவரிடமிருந்து 15 இலட்சம் ரூபா பணம் கொள்ளையிடப்பட்டதாக பின்வத்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இது தொடர்பான விசாரணைகளை பாணந்துறை பிரிவுக் குற்ற விசாரணைப் பணியகம் முன்னெடுத்திருந்தது.

விசாரணைகளைத் தொடர்ந்து, நேற்று செவ்வாய்க்கிழமை வாதுவை பொலிஸ் பிரிவில் வைத்து ஒரு குழுவினரால் இந்தச் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

இதன்போது கொள்ளையிடப்பட்ட பணத்தில் 490,000 ரூபா, கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியன சந்தேகநபரிடமிருந்து மீட்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் வஸ்கடுவை பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை பாணந்துறை பிரிவுக் குற்ற விசாரணைப் பணியகம் முன்னெடுத்து வருகின்றது.