
பெண்ணை தீ வைத்து எரித்த நபர் கைது
2022 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 25ஆம் திகதி, எகொடஉயன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீடொன்றில் நுழைந்து பெண்ணொருவர் படுகொலை செய்து தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மொரட்டுவை – கட்டுகுருந்த பிரதேசத்தை சேர்ந்த 42 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எகொடஉயன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
