பெண்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பாக கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கிடையில் கலந்துரையாடல்
-முல்லைத்தீவு நிருபர்-
பெண்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பாக கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் ,அரச உத்தியோகத்தர்களுக்குமான கலந்துரையாடல் ஒன்று, கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதிப்பொலிஸ்மா அதிபர் ஜே.ஏ.சந்திரசேன தலைமையில், கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடலில் , கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்கதிபர் காணி நளாயினி இன்பராஜ், மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் சிசிர மெத்தர தந்திரி, உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் சமரக்கோன், , கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பாக கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் ,சிறுவர் மற்றும் பெண்கள் தொடர்பாக மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.