பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளை ஒழிக்கும் வேலைத்திட்டம்
பெண்களுக்கு எதிரான அனைத்துவித பாகுபாடுகளையும் ஒழிக்கும் சமவாயத்தின் கீழ் கடடுப்பாடுகளுக்கமைய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அமைச்சுக்களுக்கிடையிலான நிரந்தர குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
1982 ஆம் ஆண்டில் பெண்களுக்கெதிரான பாகுபாடுகளை ஒழிப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபையினால் குழு ஸ்தாபிக்கபபட்டது.
குறித்த சமவாயத்தை இலங்கை ஏற்று அங்கீகரித்துள்ளதுடன், அதற்கு இணங்குகின்ற வகையில் நியதிச்சட்ட நடவடிக்கைகளை கடைப்பிடித்தல், சட்டங்களை இயற்றுதல் மற்றும் தேவையான சமகால அறிக்கைகளை வழங்குதல் தொடர்பான கடப்பாடுகளும் உண்டு.
பெண்களுக்கெதிரான அனைத்துவிதமான பாகுபாடுகளை ஒழித்தல் சமவாயத்தின் கீழ் பெண்களுக்கெதிரான பாகுபாடுகளை ஒழிக்கின்ற ஐக்கிய நாடுகள் சபையின் குழுவால் நாட்டுக்கு ஏற்புடைய வகையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள விதந்துரைகளின் அடிப்படையில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை பருவகால அறிக்கை தயாரிக்கப்படும்.
இதனைத் தொடர்ந்து இடம்பெற்ற மீளாய்வின் போது கட்டாய அறிக்கைப்படுத்தல் மற்றும் தொடராய்வு செய்தல் பொறுப்புக்கள் தொடர்பான கூட்டான அணுகுமுறையுடன் கூடிய நடவடிக்கைகள் தேவையெனக் கண்டறியப்பட்டுள்ளது.
அதற்கமைய, நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இயலுமாகும் வகையில் மற்றும் ஏனைய ஏற்புடைய கொள்கை ரீதியான தீர்மானங்களை மேற்கொள்வதற்காக அமைச்சுக்களுக்கிடையிலான நிரந்தரக் குழுவொன்றை தாபிப்பதற்காக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.