
பெண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயதை தீர்மானிப்பது தொடர்பில் கவனம்
குறைந்தபட்ச திருமண வயதை நிறுவுவதற்கான திட்டம் உட்பட சட்டமன்ற சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கான இலங்கைப் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு நேற்று முன் தினம் செவ்வாய்க்கிழமை கூடியது.
இலங்கையில் குழந்தை பாதுகாப்பு முயற்சிகளை மேம்படுத்துவதற்காக, தற்போதுள்ள திருமணச் சட்டங்களைத் திருத்தி, சர்வதேச தரநிலைகளுக்கு ஏற்ப “குழந்தை” என்பதை வரையறுக்க வேண்டியதன் அவசியம் குறித்து இந்தக் குழுவில் விவாதிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து பாராளுமன்ற ஒப்புதலுக்கான விரிவான பரிந்துரைகளை உருவாக்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்