பெக்கோ சமனின் மற்றுமொரு சகாவும் கைது

தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுவரும் திட்டமிடப்பட்ட குற்றவாளியான பெக்கோ சமனின் மற்றுமொரு நெருங்கிய கூட்டாளியும் இன்று (14) கைது செய்யப்பட்டார்.

39 வயதான சந்தேக நபரை தங்காலை குற்றவியல் பிரிவின் அதிகாரிகள் சூரியவெவவில் வைத்து கைது செய்துள்ளனர்.

அவரிடமிருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி ஒன்றும், 40 தோட்டாக்களும், 250 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபர், சூரியவெவ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.