பெக்கோ சமனின் மனைவி விளக்கமறியலில் : பெக்கோ சமனின் 3 வயது மகள்?

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள பெக்கோ சமனின் மனைவி ஷாதிகா லக்ஷனியை, எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேக நபர் நேற்று வியாழக்கிழமை கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ்.போதரகம முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து தனது மூன்று வயது மகளை நீதிமன்றத்திற்கு அழைத்து வந்த அவர், நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டபோது, ​​தனது குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைப்பதாக தெரிவித்துள்ளார்.