பெக்கோ சமனின் மனைவிக்கு பிணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பெக்கோ சமனின் மனைவி சாதிகா லக்ஷானி பிணையில் செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ்.போதரகம இன்று வெள்ளிக்கிழமை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

விஷ போதைப் பொருள் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய, சந்தேகநபரை விளக்கமறியலில் வைப்பதற்கான போதுமான ஆதாரங்களை முறைப்பாட்டாளர் சமர்பிக்க தவறியுள்ளார்.

இந்த நிலையில் பெக்கோ சமனின் மனைவிக்கு பிணை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.