
பூ வியாபாரியை கத்தியால் குத்தியவர் கைது
அனுராதபுரம் வாகன தரிப்பிடத்தில் பூ விற்பனை செய்து கொண்டிருந்த 33 வயதுடைய நபரை கத்தியால் குத்தி காயப்படுத்திய மற்றுமொரு பூ விற்பனையாளர் இன்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டதாக உடமல்வ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அனுராதபுரம், பந்துலகம பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய பூ விற்பனையாளர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பூ வியாபாரத்தில் ஈடுபட்ட இருவருக்குமிடையில் பண கொடுக்கல் வாங்கல் தொடர்பில் நேற்று புதன் கிழமை பிற்பகல் இடம்பெற்ற வாய்த்தர்க்கத்தின் பின்னரே இந்த கத்திக்குத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அநுராதபுரம் சங்கமித்த மாவத்தையைச் சேர்ந்த 33 வயதுடைய பூ வியாபாரி ஒருவர் இந்த கத்திக்குத்து தாக்குதலில் படுகாயமடைந்து சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
