பூநகரியில் வெடிபொருட்கள் கண்டுபிடிப்பு

-யாழ் நிருபர்-

பூநகரி எட்டாம் கட்டை பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் பத்து மோட்டார் குண்டுகள் இருப்பதாக கிளிநொச்சி பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய சம்பவ இடத்துக்கு விரைந்த கிளிநொச்சி பொலிசார் 60எம்.எம் குண்டுகள் 8, 4 எம்.எம் குண்டு ஒன்று, கைக்குண்டு ஒன்று ஆகியவற்றை பார்வையிட்டதுடன் இந்த விடயம் தொடர்பாக நீதிமன்ற அனுமதியுடன், நேற்றைய தினம் புதன் கிழமை சிறப்பு அதிரடிப்படையினரால் குறித்த வெடி பொருட்கள் செயலிழக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.