பூச் செடிகளை வளர்ப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டம்

பூச் செடிகளை வளர்ப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டம்

பூச் செடிகளை வளர்ப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டம்

🎈அதிர்ஷ்டத்தை தரக்கூடிய இந்த பூச்செடிகளில் ஒன்று கூடவா உங்கள் வீட்டில் இல்லை? ஏதாவது ஒரு செடியை மட்டும் வைத்து பாருங்கள் சந்தோஷத்திற்கு பஞ்சமே வராது. சில பேருக்கு எதனால் அதிர்ஷ்டம் வந்தது என்றே தெரியாது. ஒரே ஒரு ரோஜா செடியை கடையிலிருந்து எதிர்பாராமல், எதிர்பாரா நேரத்தில் வாங்கி வைத்திருப்பார். அந்த ரோஜா செடியின் மூலம் கண்ணுக்குத் தெரியாமல் ஒரு அதிர்ஷ்டம் அடிக்கும். நம்ப முடியவில்லையா? நிச்சயம் இது உண்மை. செடிகளின் மூலம் நமக்கு எதிர்பாரத அதிர்ஷ்டத்தை தேடித் தர முடியும் என்பது மறுக்க முடியாத ஒன்று. அந்த வகையில் நமக்கு அதிர்ஷ்டத்தை தரக்கூடிய பல பூச்செடிகள் உள்ளன. அதில் சிலவற்றை இப் பதிவில் பார்ப்போம்.

இட்லி பூச்செடி

💐இந்த பூச்செடியை வெட்சி பூ என்றும் சொல்லுவார்கள். இது வெற்றி பூச்செடியாகும். அந்த காலங்களில் எல்லாம் போருக்கு செல்பவர்கள் இந்த பூவை சூடிக் கொண்டு செல்வார்கள். இந்தப் பூவை வைத்து சென்றால் கட்டாயம் வெற்றி கிடைக்கும் என்று நம்பி உள்ளார்கள். அவர்களுக்கு வெற்றியும் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே, இந்தப் பூவை வீட்டில் வைத்து வளர்ப்பவர்களுக்கு, வெற்றி தானாக தேடி வரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

பன்னீர் ரோஜா

💐வீட்டில் பன்னீர் வாசம் இருந்தால், லட்சுமி கலாட்சம் தேடி வரும் என்பது நாம் எல்லோரும் அறிந்த விடயம். பன்னீர் ரோஜா நிரந்தரமாக பன்னீர் வாசத்தை வீசும், இந்த பூச்செடியை வீட்டின் முன்பு வைத்து வளர்த்தால் நம்முடைய வீட்டிற்கு நிச்சயம் அதிர்ஷ்டம் கிடைக்கும். இந்த வாசம் நம்மை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும்.

ஜாதிமல்லி

💐நம்முடைய வீட்டை வாசத்திற்கு மாற்றக்கூடிய சக்தி இந்த ஜாதி மல்லிப் பூவிற்க்கு உள்ளது. இந்த வாசம் நம் மனதிற்கு நேர்மறை ஆற்றலை எப்போதும் தந்துகொண்டே இருக்கும் என்று சொன்னால் அது பொய்யாகாது.

குண்டு மல்லிகை

💐இந்த பூவை நம் வீட்டில் வைத்து வளர்த்து, அதில் பூக்கும் பூவைப் பறித்து தினம்தோறும் புதியதாக இறைவனுக்கு சூட்டி வழிபட்டால், பல நன்மைகளை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. பெண்களுக்கு எல்லா பூவை காட்டிலும், மிகவும் பிடித்த பூ குண்டு மல்லிகை பூ.

முல்லைப் பூ

💐முல்லைப் பூவானது குரு பகவானுக்கு உரிய பூ. ஒருவரது வீட்டில் முல்லைப்பூ இருந்தால் அந்த வீட்டிற்கு குருபகவானின் ஆசீர்வாதமே கிடைக்கும்.

🎈மேலும் சில பூக்களை எல்லாம் வீட்டில் வைத்து வளர்த்து வந்தால் வாஸ்து பிரச்சனை வராது என்று சொல்லப்படுகிறது. அது என்னென்ன என்பதையும் பின்வருமாறு தெரிந்துகொள்ளலாம்.

வாடாமல்லி

💐எப்போதுமே வாடாமல் இருக்கும் வாடாமல்லி பூச்செடியை உங்கள் வீட்டில் வளர்த்து வந்தால், எப்படிப்பட்ட வாஸ்து தோஷத்தையும் அது சரி செய்துவிடும். வாடாமல் இருக்கும் அந்தப் பூ, நம் வீட்டில் இருந்தால், நாம் சந்தோஷமும் எப்போதும் வாடாமல் இருக்கும் என்பது நம்பிக்கை.

கோழிக்கொண்டை பூ

💐இந்த பூவும் எளிதாக வாடக் கூடியது அல்ல. பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும் இந்த பூவை உங்கள் வீட்டில் வைத்து வளர்த்தால், அதிர்ஷ்டம் கிடைக்கும். இந்த பூக்களை பார்க்கும்போது மனம் கட்டாயம் சந்தோஷம் அடையும்.

சங்குப்பூ

💐இதில் நீல நிற சங்குப்பூவாக இருந்தாலும், வெள்ளைநிற சங்குப்பூவாக இருந்தாலும் வீட்டில் வைத்து வளர்ப்பது நல்லது. இந்தப் பூவைப் பறித்து தினம்தோறும் விநாயகருக்கும், சிவபெருமானுக்கும் சூட்டி வந்தால் தீராத பிரச்சனைகளும் தீரும்.

🎈மேல் குறிப்பிட்டுள்ள எல்லா செடிகளையும் உங்கள் வீட்டில் வைத்து பராமரிக்க முடியாவிட்டாலும், ஒரு சிறிய தொட்டியில் உங்களுக்கு எந்த செடி பிடித்திருக்கிறதோ அதை வைத்து வளர்த்து வந்தால், உங்களை அறியாமல், ஒரு நேர்மறை எண்ணமும், மன அமைதியையும் உங்களால் உணரமுடியும். அதுவே, அதிர்ஷ்டத்தையும், வெற்றியையும் தானாக வீட்டிற்குள் அழைத்து வந்துவிடும்.

பூச் செடிகளை வளர்ப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டம்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்