பூசணி விதை பயன்கள்

பூசணி விதை பயன்கள்

பூசணி விதை பயன்கள்

⭕தற்போது மக்கள் தங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த நட்ஸ்களையும் விதைகளையும் தங்களின் தினசரி உணவில் சேர்த்து வருகிறார்கள். இதில் நட்ஸ்களைப் பற்றி பல கட்டுரைகளில் படித்திருப்பீர்கள். ஆனால் விதைகளைப் பற்றி, அவற்றில் உள்ள சத்துக்கள் மற்றும் அவை நமக்கு வழங்கும் நன்மைகளைப் பற்றி நிறைய பேருக்கு தெரிந்திருக்காது. அப்படிப்பட்ட விதைகளுள் மிகவும் சுவையான ஒரு விதை பூசணி விதை.

⭕நம்மில் நிறைய பேர் பூசணிக்காயை வாங்கி சமைக்கும் போது, அதனுள் உள்ள விதைகளை தூக்கி எறிந்துவிடுவோம். ஆனால் அந்த விதைகளில் பூசணிக்காயில் உள்ள சத்துக்களை விட அதிகளவு சத்துக்கள் உள்ளன. முழு பூசணிவிதையானது வெள்ளை நிற ஓட்டால் மூடி இருக்கும். அதை நீக்கினால் உள்ளே வெளிரிய பச்சை நிற விதைகள் இருக்கும். இந்த விதைகள் மிகவும் சுவையாக இருக்கும்.

⭕வெளிநாடுகளில் மக்கள் இந்த விதைகளை அதிகமாக தங்களின் உணவில் சேர்ப்பார்கள். இந்த பூசணி விதைகளை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

🔶தினமும் ஒரு கையளவு பூசணி விதைகளை உட்கொண்டு வருவதன் மூலம், இரைப்பை, மார்பகம் மற்றும் பெருங்குடல் புற்றுநோய்களின் அபாயம் குறைகிறது. இதற்கு அந்த விதைகளில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் தான் காரணம். முக்கியமாக இந்த விதைகளில் உள்ள கரோட்டினாய்டுகள் ஆண்களுக்கு வரும் புரோஸ்டேட் புற்றுநோயைத் தடுக்கிறது.

🔶பூசணி விதைகளில் புரோட்டீன்கள் மற்றும் நார்ச்சத்து அதிகளவில் உள்ளன. எனவே இந்த விதைகளை தினமும் உட்கொள்ளும் போது, அது நீண்ட நேரம் வயிற்றை நிரப்பி வைத்திருப்பதோடு, அளவுக்கு அதிகமாக உணவு உண்பதைக் குறைத்து, உடல் எடை இழப்பிற்கு உதவுகிறது.

🔶பூசணி விதைகளல் மக்னீசியம் அதிகமாக உள்ளது. மக்னீசியம் இரத்த சர்க்கரைஅளவைக் குறைக்க உதவுவதால், சர்க்கரை நோயாளிகளுக்கு பூசணி விதைகள் சிறந்த ஸ்நாக்ஸாகும். எனவே சர்க்கரை நோய் உள்ளவர்கள் இந்த விதைகளை தினசரி உணவில் சேர்ப்பது நல்லது.

🔶உங்களால் தினமும் இரவில் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியவில்லையா? அப்படியானால் பூசணி விதைகளை தினமும் சாப்பிடுங்கள். இதனால் அதில் உள்ள ட்ரிப்டோஃபேன் என்னும் அமினோ அமிலம் நல்ல தூக்கத்தைப் பெற உதவும்.

🔶பூசணி விதைகள் இதயத்திற்கு மிகவும் நல்லது. இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் பல்வேறு பிரச்சனைகளில் இருந்து இதயத்தைப் பாதுகாக்கிறது. குறிப்பாக இதில் உள்ள மக்னீசியம் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது மற்றும் கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசரைடுகளின் அளவைக் குறைத்து இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது. மேலும் பூசணி விதையில் உள்ள நார்ச்சத்து கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து, இதயத்தை பாதுகாக்கிறது.

🔶பூசணி விதைகளில் மக்னீசியம் அதிகமாக உள்ளன. மக்னீசியம் எலும்புகளின் வளர்ச்சிக்கும், வலிமைக்கும் தேவையான சத்தாகும். ஆய்வு ஒன்றில், தினமும் போதுமான அளவு மக்னீசியத்தைப் பெறுபவர்களின் எலும்புகளில் கனிமச்சத்துக்கள் அதிகமாக இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் இதனால் அவர்களுக்கு எலும்பு முறிவு மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் ஏற்படும் அபாயமும் குறைகிறது.

🔶உங்களின் நோயெதிர்ப்பு சக்தி வலுவாக இருக்க வேண்டுமானால், பூசணி விதைகளை உட்கொண்டு வாருங்கள். இதனால் அதில் உள்ள வைட்டமின் ஈ மற்றும் ஜிங்க் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கி, உடலைத் தாக்கும் நோய்க்கிருமிகளிடம் இருந்து உடலைப் பாதுகாக்கிறது. மேலும் இந்த விதைகளில் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இருப்பதால், ப்ரீ ராடிக்கல்களால் உடலில் உள்ள செல்கள் சேதமடைவது தடுக்கப்படுகிறது.

🔶பூசணி விதைகளில் ஜிங்க் சத்து அதிகமாக உள்ளன. ஜிங்க் சத்தானது டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிப்பதோடு, விந்தணுக்களின் தரம் மற்றும் எண்ணிக்கையை அதிகரித்து, ஆண்களின் கருவளத்தை மேம்படுத்துகிறது. எனவே விந்தணு தொடர்பான பிரச்சனைகளை சந்திக்கும் ஆண்கள் தினமும் பூசணி விதைகளை சாப்பிடுவது நல்லது.

பூசணி விதை பயன்கள்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்