பூக்கள் விற்பனையில் பாரிய வீழ்ச்சி

நாட்டில் பூக்களின் விலை அதிகரித்துள்ளதால் காதலர் தினத்தன்று பூக்கள் விற்பனையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொருளாதார நெருக்கடி காரணமாக நுகர்வோர் அனைவரும் பூக்களை கொள்வனவு செய்வதில் அதிக பணத்தை செலவழிப்பதில்லை என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

வழமையாக ஒவ்வொரு பெப்ரவரி மாதமும் பூக்களின் விற்பனை அதிகரிக்கும் நிலையில் இம்முறை பூக்கள் விற்பனையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக ரோஜா பூ ஒன்று 350 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.