புள்ளிப்பட்டியலில் RCB முன்னிலை
இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இதுவரை 11 போட்டிகள் நிறைவடைந்துள்ளன.
இதன்படி குறித்த தொடருக்கான புள்ளிப்பட்டியலில் 4 புள்ளிகளுடன் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலிடத்தில் உள்ளதுடன், டெல்லி கெப்பிடல்ஸ் அணி இரண்டாவது இடத்தில் உள்ளது.
குறித்த இரு அணிகளும் தாம் எதிர்கொண்ட 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று முதல் 2 இடங்களைப் பிடித்துள்ளன.
லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகளும் தாம் எதிர்கொண்ட 2 போட்டிகளில் 1 வெற்றி, 1 தோல்வி அடங்கலாக 2 புள்ளிகளுடன் முறையே 3ஆவது மற்றும் 4ஆவது இடத்தை பிடித்துள்ளன.
மேலும் 1 போட்டியில் மாத்திரம் விளையாடியுள்ள பஞ்சாப் கிங்ஸ் அணி 2 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திலும், 2 போட்டிகளில் விளையாடியுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 1 வெற்றி, 1 தோல்வி அடங்கலாக 2 புள்ளிகளுடன் ஆறாவது இடத்திலும் உள்ளது.
இதனைத் தொடர்ந்து 3 போட்டிகளில் விளையாடி 1 வெற்றி, 2 தோல்விகளுடன் சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் ஆகிய அணிகள் முறையே 7,8 மற்றும் 9 ஆவது இடத்தில் உள்ளன.
இந்தநிலையில் எவ்வித புள்ளிகளுமின்றி மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் இறுதி இடத்திலுள்ளமை குறிப்பிடத்தக்கது.
