
புளோரிடா அரச பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச் சூடு: இருவர் பலி
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள அரச பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் கொல்லப்பட்டதுடன், மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.
துப்பாக்கிதாரி பொலிஸாரால் சுடப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் உயிரழந்தவர்கள் மாணவர்கள் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதல் நடத்திய சந்தேகநபர் அதே பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் 20 வயதுடைய நபர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவரிடம் இருந்து மூன்று துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளன.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
