
புல்லாவெளி புனித செபஸ்தியார் ஆலய பெருவிழா
-யாழ் நிருபர்-
புகழ் பெற்ற யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு புல்லாவெளி புனித செபஸ்தியார் ஆலய பெரு விழா நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
கட்டைக்காடு பங்குத்தந்தை வசந்தன் அடிகளார் தலைமையில் நேற்று காலை 6.00 மணியளவில் திருச்செபமாலையுடன் பெருவிழா திருப்பலி ஆரம்பமானது.
பெருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்டத்தின் முதன்மை குருக்களில் ஒருவரான அருட்தந்தை எட்வின் நாதன் ஒப்புக் கொடுத்தார்.
புல்லாவெளி புனித செபஸ்தியார் பெருவிழாவில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரர்கள்,அருட்சகோதரிகள் மற்றும் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகை தந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
