புலிகளின் தேசம் – இந்தியா

உலகில் உள்ள புலிகளின் எண்ணிக்கையில் 4ல் 3 பங்கு இந்தியாவில் இருக்கிறது…!

இந்த பூமியானது மனிதர்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல.. பல லட்சக்கணக்கான உயிரினங்களின் கூட்டுத்தொகுப்பாகவே உலகம் இயங்கி வருகிறது. 2021ம் ஆண்டு தரவுகளின்படி இந்தியாவில் 8 கோடி ஹெக்டேர் அளவு வனப்பகுதி உள்ளது. இதில் மரங்கள்இ செடிகொடிகள் மற்றும் அது சார்ந்த உயிரினங்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காமல் உள்ளன. ஒரு வனத்தின் சூழல் தண்மையைப் பாதுகாப்பதில் புலிகளின் பங்கு என்பது மிகமிக முக்கியமானது என நிபுணர்கள் கூறுகின்றனர்.

புலிகள் வசிக்க உகந்த சூழலாக மலைக்காடுகள்இ பசுமை வெளிகள் மற்றும் சதுப்பு நிலக் காடுகள் உள்ளன. உலகின் பல நாடுகளிலும் இல்லாத இந்த அம்சங்கள் இந்தியாவின் புவியியல் அமைப்பில் மிக இயல்பாக இருப்பதால் புலிகள் வசிக்க இயல்பான சூழல் உள்ளது. பூமியில் புலிகள் எண்ணிக்கை அதிகரித்தால் வனவிலங்குகளின் எண்ணிக்கை சமமடைந்து வனப்பகுதியின் சூழல் சீராவதுடன்இ காடுகள் பாதுகாக்கப்படும் என்கிறது உலக வன வாழ்வியல் அமைப்பான WWF.

54 சரணாலயங்கள் இந்தியாவில் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் புலிகளின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகின்றன. உலகில் உள்ள புலிகளின் எண்ணிக்கையில் 4ல் 3 பங்கு இந்தியாவில் இருக்கிறது. வேட்டையாடுவதைத் தவிர்த்தாலே புலிகளின் எண்ணிக்கை கணிசமாக உயரும் என்பதும் நிபுணர்களின் நம்பிக்கையாக உள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்