புலம் பெயர்ந்தோர் தொடர்பில் சர்ச்சையான கருத்து : வழக்கு தொடர்பான அறிவிப்பு!
புலம்பெயர்ந்தோர் குறித்து இணையத்தில் விமர்சனம் செய்ததற்காக சிறையில் அடைக்கப்பட்ட இங்கிலாந்து அரசியல்வாதி ஒருவரின் மனைவி தொடர்பான வழக்கு எதிர்வரும் வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
சவுத்போர்ட்டில் உள்ள விடுமுறை விடுதி ஒன்றில் மூன்று சிறுமிகள் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் இடம்பெற்ற போது புகலிடம் கோருவோர் தங்கியுள்ள இடங்கள் தீக்கிரையாக்கப்பட வேண்டும் என்று நோர்த் ஹாம்ப்டனைச் சேர்ந்த லூசி கோனொலி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார்.
அவரது கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு அவருக்கு இரண்டு ஆண்டுகள் மற்றும் ஏழு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது
எனினும் அவர் தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மேன்முறையீடு செய்தார்
இந்நிலையில் அவரது வழக்கு எதிர்வரும் வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.