புலமைப் பரிசில் பரீட்சை ஆரம்பமானது

-யாழ் நிருபர்-

தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையானது இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு நாடு முழுவதும் உள்ள 2,787 பரீட்சை நிலையங்களில் ஆரம்பமாகியது.

அந்தவகையில் யாழ்ப்பாணக் கல்லூரி மற்றும் வட்டு மத்திய கல்லூரி ஆகிய பாடசாலைகளில் அமைக்கப்பட்டுள்ள பரீட்சை நிலையத்திலும் பரீட்சை ஆரம்பமாகியது.

இதன்போது மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் பரீட்சையில் கலந்து கொள்வதை அவதானிக்க முடிந்தது.

இதேவேளை பரீட்சைக்காக பரீட்சை நிலையங்களை தயார்படுத்தும் பணிகளும் நேற்று மேற்கொள்ளப்பட்டன.

இம்முறை புலமைப்பரிசில் பரீட்சைக்காக 307,951 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர்.

புலமைப்பரிசில் பரீட்சையில் இரண்டாம் பகுதி வினாத்தாள் முதலில் வழங்கப்பட்டு காலை 10.45 மணிக்கு முடிவடையவுள்ளது.

அதன் பின்னர், அரை மணி நேர இடைவேளை விடப்பட்டு, காலை 11.15 மணிக்கு முதலாம் பகுதி வினாத்தாள் வழங்கப்படவுள்ளது.

இந்த வினாத்தாளுக்கு பதிலளிக்க ஒரு மணி நேரம் வழங்கப்படவுள்ளதுடன், அதன்படி, வினாத்தாள் மதியம் 12.15 மணிக்கு முடிவடையவுள்ளது.

அதன்படி, 09:30 மணிக்கு ஆரம்பமாகும் பரீட்சை பிற்பகல் 12:15 மணிக்கு முடிவடையவுள்ளது.

புலமைப் பரிசில் பரீட்சை ஆரம்பமானது
 

-மூதூர் நிருபர்-

நாடளாவிய ரீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை 5ஆம் தரப் புலமைப்பரிசில் பரீட்சை இடம்பெற்றது.

இந்நிலையில் திருகோணமலை – தோப்பூர் -அல்ஹம்றா மத்திய கல்லூரியின் பரீட்சை நிலையத்தில் அமைக்கப்பட்ட பரீட்சை நிலையத்திற்கு மாணவமாணவிகள் பரீட்சை எழுதுவதற்குச் சென்றதை காணமுடிந்தது.

பெற்றோர்கள்,ஆசிரியர்கள் பரீட்சை எழுதும் மாணவர்களை வழியனுப்பி வைத்ததையும் காணமுடிந்தது.

புலமைப் பரிசில் பரீட்சை ஆரம்பமானது
 

புலமைப் பரிசில் பரீட்சை ஆரம்பமானதுபுலமைப் பரிசில் பரீட்சை ஆரம்பமானது

-அம்பாறை நிருபர்-

நாடெங்கிலும் ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை அம்பாறை மாவட்டத்தில் சுமூகமாக நடைபெற்று வருகின்றது.

2025 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் ஞாயிற்றுக்கிழமை (10) நாடெங்கிலும் அமைக்கப்பட்டிருந்த பரீட்சை நிலையங்களில் ஆரம்பமானது.

அம்பாறை மாவட்டத்திலுள்ள கல்முனை சம்மாந்துறை அக்கரைப்பற்று கல்வி வலயங்களில் இன்று இப்பரீட்சை ஆரம்பமானதுடன் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் சென்றதை காண முடிந்தது.அத்துடன் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பரீட்சை நிலையத்திற்கு பெற்றோருடன் வருகை தந்திருந்தனர்.

மேலும் பரீட்சை நிலையங்களுக்கு சுகாதார பிரிவினர் மற்றும் பொலிஸார் வருகை தந்து பாதுகாப்பு அறிவுறுத்தல்களை வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

புலமைப் பரிசில் பரீட்சை ஆரம்பமானது
 

-நுவரெலியா நிருபர்-

இலங்கை முழுவதும் தரம் ஐந்து மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சையானது இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகியது.

அந்தவகையில் நானுஓயா நகரில் மாணவர்கள் மிக ஆர்வத்துடன் பரீட்சை மண்டபத்திற்கு செல்லக்கூடியதை அவதானிக்க முடிந்தது.

நானுஓயா நகரில் மத்தியில் அமைந்துள்ள மமா/நு/நாவலர் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சை மண்டபத்திற்கு மாணவர்கள் ஆர்வத்துடன் வருகைத்தந்தனர்.

அத்துடன் ஆலய வழிபாடுகளில் ஈடுபட்ட மாணவர்கள் பெரியவர்களிடமும் பெற்றோர்களிடமும் ஆசிகள் பெற்று பெற்றோர்கள் இன்று காலை ஆர்வத்துடன் மாணவர்களை பாடசாலைகளுக்கு அழைத்துவந்ததையும் காணமுடிந்தது.

நானுஓயா நகரில் அத்தோடு பரீட்சை நிலையங்களுக்கு பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடதக்கது.