புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் திகதி அறிவிப்பு!

2025 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சைகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த பரீட்சைக்கான விண்ணப்பங்கள் நாளை முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை நிகழ்நிலை முறைமையில் ஏற்றுக்கொள்ளப்படுமென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, 30 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிக்குப் பின்னர் நிகழ்நிலை முறைமை மூடப்படும்.

எக்காரணத்திற்காகவும் விண்ணப்பப்படிவங்களை ஏற்றுக்கொள்ளும் திகதி நீட்டிக்கப்பட மாட்டாது எனவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

விண்ணப்பிப்பதற்கான அறிவுறுத்தல்கள், பிரமாணங்கள் ஆகியவற்றை https://onlineexams.gov.lk/eic என்ற இணையத்தளத்தில் பிரவேசித்து பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அந்த திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.