புலத்கொஹுபிட்டிய பிரதேசத்தில் மண்சரிவு

கேகாலை – புலத்கொஹுபிட்டிய பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை பிற்பகல் பெய்த கடும் மழை காரணமாக மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்த மண்சரிவினால் உடபொத உலகம கிராமத்திற்கு செல்லும் வீதி முற்றாக தடைப்பட்டுள்ளது.

தற்போது கிராம மக்கள் இணைந்து மண்மேட்டை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பதினைந்து வருடங்களுக்கு முன்னர் குறித்த பிரதேசத்தில் மண்சரிவு ஏற்பட்டதாகவும் மண்சரிவு அபாயம் காரணமாக அப்பகுதியிலிருந்து பல குடும்பங்கள் வெளியேற்றப்பட்டதாகவும் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த மண்சரிவு ஏற்பட்ட மலைக்கு மேல் அபாயகரமான கிரானைட் கற்கள் இருப்பதாகவும் இது குறித்து அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டுமெனவும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்