புற்று நோயால் பாதிக்கப்பட்ட மனைவி: உடல் உறவுக்காக கணவரின் மோசமான செயல்

வெலிபென்ன பகுதியில் புற்று நோயினால் பாதிக்கப்பட்ட மனைவியை உடலுறவுக்கு கணவர் வற்புறுத்துவதாக தெரிவித்து மனைவி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

67 வயதுடைய கணவன் மீதே 54 வயதுடைய பெண் இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளார்.

தனக்கு 14 வயதாக இருக்கும்போது விருப்பமில்லாமல் தனது கணவரை திருமணம் செய்ததாகவும், தங்களுக்கு திருமணமாகி 40 வருடங்களாவதாகவும் அவர் கூறியுள்ளர்.

மேலும், தனக்கும் தங்களுக்கு மூன்று மகன்கள் இருப்பதாகவும், மூத்த மகனுக்கு 40 வயது என்றும் அவர் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

வெலிப்பன்ன பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் சர்மிந்த டி சில்வாவின் அறிவுறுத்தலின்படி, பொலிஸ் பரிசோதகர் நிஷான் குமார மற்றும் பல்வேறு முறைப்பாடுகள் பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் ஜயரத்ன ஆகியோர் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்