
புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள பிரபல நடிகர்
கே.பாலசந்தர் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்கள் பலர் உள்ளார்கள், அதில் ஒரு பிரபலம் தான் ஷிஹான் ஹுசைன்.
புன்னகை மன்னன் படத்தில் ஒரு ரோலில் சிறப்பாக நடித்து அசத்திய இவர் இப்படத்தை தொடர்ந்து வேலைக்காரன், மூங்கில் கோட்டை, உன்னை சொல்லி குற்றமில்லை என தொடர்ந்து நடிக்க ஆரம்பித்தார்.
இன்னொரு பக்கம் நடிகர்கள் விஜய், பவன் கல்யாண் உள்ளிட்டோருக்கு ஹுசைனி கராத்தே பயிற்சி அளித்திருக்கிறார்.
இவர் அண்மையில் ஒரு பேட்டியில், தனக்கு ரத்த புற்றுநோய் வந்திருப்பதாக கூறியுள்ளார். நான் ஒருநாள் வாழ்வதற்கு 2 யூனிட் ரத்தம் மற்றும் பிளேட்லெட்ஸ் வேண்டும், இன்னும் கொஞ்ச நாள்தான் உயிரோடு இருப்பேன்.
எனக்கு மன தைரியம் அதிகம், நான் கராத்தே சொல்லிக்கொடுக்கும் இடத்தை விற்கலாம் என்று முடிவு செய்துவிட்டேன்.
பவன் கல்யாண் இங்கு வந்துதான் கராத்தே கற்றுக்கொண்டார், எனவே அவர் இந்த இடத்தை வாங்கிக்கொள்ள வேண்டும்.
விஜய்க்கு ஒரு கோரிக்கை, அவர் தமிழ்நாடு முழுவதும் வீட்டுக்கு ஒரு வில்வித்தை வீரர், வீராங்கனையை உருவாக்க வேண்டும் என்றார்.