புறக்கோட்டை மத்திய பஸ் நிலையத்தின் புதுப்பித்தல் பணி இன்று ஆரம்பம்
புறக்கோட்டை மத்திய பஸ் நிலையத்தின் புதுப்பித்தல் நடவடிக்கை இன்று (15) காலை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் ஆரம்பமாகிறது .
1964 ஆம் ஆண்டு நிர்மாணிப்பட்ட புறக்கோட்டை மத்திய பஸ் நிலையம் 60 ஆண்டுகளுக்குப் பின்னர் முழுமையாக புதுப்பிக்கப்படுகிறது.
இதற்கு 424 மில்லியன் ரூபாய் செலவாக கணக்கிடப்பட்டுள்ளது.புதுப்பித்தல் நடவடிக்கையின் கீழ், புதிய ஓய்வு அறைகள், தகவல் தொடர்பு நிலையங்கள், பாதுகாப்பு அமைப்புகள் உள்ளிட்ட பல அம்சங்கள் பஸ் நிலையத்தில் நிறுவப்படவுள்ளன.
புறக்கோட்டை மத்திய பஸ் நிலையத்தின் புதுப்பித்தல் நடவடிக்கைகள் இலங்கை விமானப்படையால் மேற்கொள்ளப்படுகின்றன .
இதேநேரம் க்ளின் சிறிலங்கா திட்டத்தின் கீழ் மருதானை ரயில் நிலையத்தின் புதுப்பித்தல் நடவடிக்கையும் இன்று ஆரம்பமாகிறது .
ரயில் நிலையத்தின் வரலாற்றுத் தன்மைக்கு பாதிப்பு விளைவிக்காத வகையிலும் அதன் பழமை தன்மையைப் பாதுகாக்கும் வகையிலும் புதுப்பித்தல் பணிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
