புரூனே சென்றார் மோடி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி புரூனே மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்கு இரு நாள் பயணமாக இன்று புறப்பட்டுச் சென்றதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தியா- புரூனே இடையேயான தூதரக உறவுகள் தொடங்கி 40 ஆண்டுகள் நிறைவடைவதைக் குறிக்கும் வகையிலும் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் பிரதமர் மோடியின் இந்தப் பயணம் அமைவதாகவும் இந்திய செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

இதேவேளை புருனே செல்லும் முதலாவது இந்தியப் பிரதமர், நரேந்திர மோடி ஆவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

இதேபோல சிங்கப்பூர் செல்லும் பிரதமர் மோடி இருதரப்பு உறவுகள் தொடர்பான பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்