புயல் உருவாக வாய்ப்பு: வடகிழக்கு மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வங்காள விரிகுடாவில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுநிலை புயலாக மாறுவதற்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எனினும், கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களுக்கு பாதிப்புகள் இல்லை என்று யாழ் பல்கலைக்கழகத்தின் புவியியற்றுறை மூத்த விரிவுரையாளர் நா. பிரதீராஜா தெரிவித்துள்ளார்.

வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென் கிழக்கே புதிய காற்றழுத்த தாழ்வுநிலை இன்று ஞாயிற்றுக்கிழமை உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் யாழிற்கு கிழக்காக வங்காள விரிகுடாவில் காற்றுச் சுழற்சி ஒன்றும் காணப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த சுழற்சியானது வடகிழக்குத் திசை நோக்கி நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக சிலவேளைகளில் புயலாகவும் மாற்றம் பெறலாம். அவ்வாறு புயலாக மாற்றம் பெற்றால் ‘மொச்சா’ என்று பெயர் சூட்டப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதன் தோற்றமும் நகர்வுப் பாதையும் மத்திய வங்காள விரிகுடாவில் இருப்பதானால் இலங்கைக்கு குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு நேரடியாக எத்தகைய பாதிப்பும் ஏற்படாது.

இருப்பினும், இன்று முதல் எதிர்வரும் 12ஆம் திகதி வரையும் அவ்வப்பொழுது மழை கிடைக்குமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்