புனித நோன்புப் பெருநாள்

இலங்கை வாழ் இஸ்லாமிய மக்கள் இன்றைய தினம் புதன் கிழமை நோன்புப் பெருநாளைக் கொண்டாடுகின்றனர்.

புனித ஷவ்வால் மாதத்துக்கான தலைபிறை தென்பட்டுள்ளமையினால் இன்றைய தினம் புனித நோன்புப் பெருநாளைக் கொண்டாடுவதற்கு கொழும்பு பெரிய பள்ளவாசலில் நேற்று செவ்வாய் கிழமை கூடிய பிறைக்குழு ஏகமனதாக தீர்மானித்தது.

கொழும்பு பெரிய பள்ளிவாசலின் தலைவர் தாஹிர் றஷீன் தலைமையில் ஹிஜ்ரி 1445 புனித ஷவ்வால் மாதத்துக்கான தலைபிறை பார்க்கும் மாநாடு மஹ்ரிப் தொழுகையின் பின்னர் கொழும்பு பெரிய பள்ளிவாசல் மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது.

இதன்போது நாட்டின் பல பாகங்களிலும் ஷவ்வால் மாதத்துக்கான தலைபிறை தென்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் கிடைத்ததை அடுத்து இலங்கை வாழ் இஸ்லாமியர்களை இன்றைய தினம் நோன்புப் பெருநாளைக் கொண்டாடுமாறு கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிறைக்குழுத் தலைவர் கலீபதுல் குலபா மௌலவி எம்.பி.எம் ஹிஷாம் பத்தாகி அறிவித்துள்ளார்.

இந்த மாநாட்டில் பிறைக்குழு உறுப்பினர்கள், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் அங்கத்தவர்கள், கொழும்பு பெரிய பள்ளிவாசலின் நம்பிக்கையாளர்கள், இஸ்லாமிய சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள அதிகாரிகள், வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரிகள், சகல பள்ளிவாசல்கள், தரீக்காக்கள், ஷாவியாக்களின் பிரதிநிதிகள், மேமன் சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்