புனிதவெள்ளி, உயிர்த்த ஞாயிறு தினங்களில் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள்

நாளை வெள்ளிக்கிழமை எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமையும் கிறிஸ்தவர்களின் புனிதவெள்ளி, உயிர்த்த ஞாயிறு தினங்களாகும்.

இதனால் கிறிஸ்தவ ஆலயங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவினால் அனைத்து மாகாண உதவிக் பொலிஸ் மா அதிபர்கள், பிராந்திய பொறுப்பதிகாரிகள் மற்றும் பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளுக்கு உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன.

அதிக எண்ணிக்கையில் கிறிஸ்தவர்கள் ஒன்றுக்கூடுவர் என எதிர்பார்க்கப்படும் தேவாலயங்களை இனங்கண்டு, அவற்றைச் சூழவுள்ள பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

மேலும், பிரதான தேவாலய வழிபாடுகள் நடைபெறும் இடங்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தும் வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த பாதுகாப்புப் பணிகளில் பொலிஸ் அதிகாரிகள், விசேட அதிரடிப் படையினர் மற்றும் முப்படையினர் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க