புத்தாண்டை முன்னிட்டு விசேட பேருந்து சேவை

தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு விசேட பேருந்து சேவையை நடத்த திட்டமிட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

500 மேலதிக பேருந்துக்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் பண்டுக ஸ்வர்ணஹன்ச தெரிவித்துள்ளார்.

முதற்கட்டமாக எதிர்வரும் 9ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரை இந்த திட்டம் அமுல்ப்படுத்தப்படும்.

பின்னர், மக்கள் மீண்டும் கொழும்பு திரும்புவதற்காக ஏப்ரல் 16 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை விசேட பஸ் சேவை முன்னெடுக்கப்படும் என, இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்