
புத்தாண்டு தினத்தில் அதிகாலையிலேயே இடம்பெற்ற விபத்து!
புத்தாண்டு தினத்தன்று அம்பலாந்தோட்டையில் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று வீதியை விட்டு விலகி தென்னை மரத்தில் மோதியதில் சாரதி காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று வியாழக்கிழமை அதிகாலை கொடகம பகுதியில் கார் வீதியை விட்டு விலகி வீதியோரத்தில் இருந்த தென்னை மரத்தில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது.
காயமடைந்த சாரதி சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
விபத்து நடந்த நேரத்தில் கார் அம்பலாந்தோட்டையிலிருந்து ஹிக்கடுவா நோக்கிச் சென்று கொண்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
