புத்தளத்தில் வெளிநாட்டு பிரஜைகள் 10 பேர் கைது

சிலாபம் – இரணவில பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் சந்தேகத்துகிடமாக தங்கியிருந்த 10 வெளிநாட்டுப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புத்தளம் குற்றவியல் விசாரணை பிரிவினருக்குக் கிடைக்கப் பெற்ற தகவல் ஒன்றுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது அவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, 4 மலேசியப் பிரஜைகளும், 3 எத்தியோப்பிய பிரஜைகளும் கைதானவர்களில் அடங்குகின்றனர்.

கைதானவர்களில் சீன பிரஜை ஒருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்