
புத்தர் படம் பொறித்த முடி வெட்டும் இயந்திரம்: ஒருவர் கைது
புத்தர் படம் அச்சிடப்பட்ட முடி வெட்டும் இயந்திரங்களுடன் நேற்று செவ்வாய் கிழமை பிற்பகல் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு மாவட்டத்தின் ஜாஎல நகரில் பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் புத்தர் படத்தை அச்சிட்ட வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 20 முடி வெட்டும் இயந்திரங்களுடன் சந்தேகநபர் ஒருவர் ஜாஎல நகரில் உள்ள பிரதான தபால் நிலையத்திற்கு முன்பாக கைது செய்யப்பட்டதாக ஜாஎல பொலிஸார் தெரிவித்தனர்.
பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில், வெள்ளி வர்ணம் பூசப்பட்ட இந்த முடி வெட்டும் இயந்திரங்களை கொள்வனவு செய்பவருக்கு, விற்பனை செய்ய காத்திருந்த சந்தேக நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கொட்டுகொட, நடகம, தபால் பெட்டி வீதியில் வசிக்கும் 35 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
