புத்தர் சிலையை காணவில்லை : பொலிஸில் முறைப்பாடு!

-மூதூர் நிருபர்-

திருகோணமலை – சேருநுவர பொலிஸ் பிரிவிலுள்ள, சோமவதி வீதியிலுள்ள, தபஸ்ஸரகெல விகாரையின் மலை உச்சியில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலையொன்று, நேற்று சனிக்கிழமை காலை இனந்தெரியாதோரால் திருடிச் செல்லப்பட்டுள்ளதாக, சேருநுவர பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அத்தோடு, அவ்விடத்தில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை, கடந்த 6 ஆம் திகதி, திருடப்பட்டிருந்ததாகவும், அதன்பின் அங்கு மீண்டும் மற்றுமொறு சிலை வைக்கப்பட்டிருந்த நிலையில், அந்த சிலையும் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை சேருநுவர பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.