புத்தர் சிலைக்கு அடியிலிருந்து சிசு மீட்பு

வத்தேகம எல்கடுவ வீதியில் மலியதேவ விஹாரைக்குச் செல்லும் வீதிக்கு அருகில் உள்ள புத்தர் சிலைக்கு அடியில் பிறந்த சிசு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வத்தேகம பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தர் சிலைக்கு அடியில் சிசு ஒன்று காணப்படுவதனை அவதானித்த பிரதேசவாசிகள் சிசுவை மீட்டு வத்தேகம வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், குழந்தை நலமுடன் இருப்பதாக வத்தேகம வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

குழந்தையை பிரசவித்த தாய் குறித்து அறிந்து கொள்ள வத்தேகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்