
புதையல் தோண்டிய 7 நபர்கள் கைது
முல்லைத்தீவில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட 7 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
புதுக்குடியிருப்பு, ஆனந்தபுரம் பகுதியில் தனியார் ஒருவரின் காணியில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட 7 நபர்களை இராணுவத்தினர் வழங்கிய தகவலுக்கமைய புதுக்குடியிருப்பு பொலிஸார் கைது செய்துள்ளதுடன், இவர்களால் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளன.
கொக்குளாய் பகுதியினை சேர்ந்த 3 பேரும் ஜா எல, மேகமுவ, வெல்லம்பிட்டிய, களனி பகுதியினை சேர்ந்த நால்வருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் புதையல் தோண்டுவதற்காக பயன்படுத்தப்பட்டதாக கருப்பபடும் இயந்திரம் ஒன்று, மண்வெட்டி, அலவாங்கு, இரண்டு மோட்டார் சைக்கிகள், கார் ஒன்று என்பன பொலிஸாரால் மீட்கப்பபட்டுள்ளதுடன், சான்று பொருட்களையும் சந்தேக நபர்களையும் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற வாசஸ் தலத்தில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
