புதையல் தோண்டிய மூவர் கைது
-திருகோணமலை நிருபர்-
திருகோணமலை-ரஜ எல பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டின் பேரில் மூன்று பேரை கைது செய்துள்ளதாக கந்தளாய் தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.
கந்தளாய்-ரஜ எல பகுதியில் வெல்ஹேன்கொட சுசந்த சில்வா என்பவருடைய வீட்டு வளாகத்தில் புதையல் தோண்டுவதாக பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, குறித்த இடத்துக்கு விரைந்த பொலிசார் மூன்று சந்தேக நபர்களை நேற்று சனிக்கிழமை மாலை கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த 45,51 மற்றும் 53 எனவும் பொலிசார் தெரிவித்தனர்.
ஏற்கனவே குறித்த இடத்தில் கல் ஒன்று இருந்ததாகவும் அந்த இடத்தில் புதையல் இருப்பதாக தெரியவந்ததை அடுத்து குறித்த இடத்தை தோண்டியதாகவும் ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது.
கைது செய்யப்பட்ட குறித்த மூன்று சந்தேக நபர்களையும் கந்தளாய் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கந்தளாய் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
செய்திகள் மற்றும் வேலைவாய்ப்பு தகவல்களை அறிய தினமும் Minnal24.com பார்க்கவும்
எமது குழுவில் இணைய கீழே உள்ள Join Whatsapp Group ஐ அழுத்தவும்