
புதையல் அகழ்வில் ஈடுபட்ட நால்வர் கைது
வெலிகந்த பொலிஸ் பிரிவில் பொரவெவ பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை புதையல் அகழ்வில் ஈடுபட்ட நால்வர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தெஹிஅத்தகண்டிய, செவனபிட்டிய மற்றும் காஷ்யப புர பிரதேசங்களை சேர்ந்த 20 முதல் 50 வயதுக்கு இடைப்பட்டவர்களே இதன் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அரலகங்வில முகாமின் அதிகாரிகளுக்கு பழங்காலப் பொருட்களை தோண்டி எடுப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைதானவர்களிடமிருந்து புதையல் தோண்டுவதற்குப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனையடுத்து, கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக வெலிகந்த பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகந்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
