புதுவருட விளையாட்டு விழாவில் கிரீஸ் மரத்திலிருந்து விழுந்து மாணவன் மரணம்

காலி – எல்பிட்டிய, பிட்டிகல பகுதியில் உள்ள அமுகொட ஸ்ரீ விஜயராம விகாரைக்கு அருகிலுள்ள விளையாட்டு மைதானத்தில் புது வருட கொண்டாட்ட விளையாட்டு போட்டிகளின் போது கிரீஸ் மரத்தில் இருந்து விழுந்து மாணவன் இன்று வியாழக்கிழமை பரிதாப மரணம்.

எல்பிட்டிய பகுதியை சேர்ந்த க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிவுகளுக்காக காத்திருந்த 16 வயது மாணவனே இவ்வாறு உயிர் இழந்துள்ளார்.

பிட்டிகல பொலிஸாரின் தகவலின்படி, கொண்டாட்டத்திற்காக 40 அடி உயரமுள்ள கிரீஸ் தடவப்பட்ட மரத்தில் ஏறும் போது, மாணவன் மரத்தில் இருந்து தவறி விழுந்துள்ளான்.

உடனடியாக எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான்.

இந்த சம்பவம் தொடர்பாக எல்பிட்டியா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை நடைபெறவுள்ளது.

பிட்டிகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க