
புதுடெல்லியில் பதற்றம்
இந்திய தலைநகர் புதுடெல்லியில், செங்கோட்டை அருகே கார் வெடித்துச் சிதறியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே நிறுத்தப்பட்டிருந்த காரில் இருந்த மர்மப் பொருள் வெடித்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வெடி விபத்தில் எட்டு பேர் உயிரிழந்துள்ள நிலையில் 20 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
வெடித்துச் சிதறிய காருக்கு அருகே நின்றிருந்த சில வாகனங்களும் தீப்பிடித்து எரிந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த வெடி விபத்து தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் மேலதிக விசாரணைகள் முன்னெடுத்துள்ளனர்.
