
மலசல கூடத்தில் இருந்து எரிபொருள் மீட்பு : ஊடகவியலாளர் விசாரணைக்கு அழைப்பு
-மன்னார் நிருபர் –
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் அலுவலகத்தின் மலசல கூடத்தில் இருந்தும் பிரதேச செயலாளரின் விடுதி மலசல கூடத்தில் இருந்தும் அண்மையில் எரிபொருள் மீட்கப்பட்டிருந்தது.
இது தொடர்பாக பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்ற நிலையில் இது தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
முல்லைத்தீவு கிளிநொச்சி மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபரினால் மாங்குளம் உதவி பொலிஸ் அத்தியட்சகர் குறித்த விடயம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள பணிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் விசாரணைகளுக்காக ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாங்குளம் உதவி பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்
நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு 7.30 மணியளவில் ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் வீட்டிற்கு வந்த மாங்குளம் பொலிஸார் நேற்று காலை மாங்குளம் பொலிஸ் நிலைய வளாகத்தில் உள்ள உதவி பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயம் வருகை தருமாறு அழைப்பு கட்டளையினை வழங்கி சென்றுள்ளனர்.
