
புதுக்குடியிருப்பில் கஞ்சாவுடன் கைதான இராணுவ உத்தியோகஸ்தர்
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் கேரளா கஞ்சாவுடன் நேற்று சனிக்கிழமை இரவு 9 மணியளவில் இராணுவ அதிகாரி மற்றும் இளைஞரை கைது செய்துள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர்களிடம் இருந்து 10 கிராம் கஞ்சாவை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
தேராவில் தேக்கங்காடு இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவ புலனாய்வு பிரிவினை சேர்ந்த 40 வயதுடையtரும் உடையார்கட்டு தெற்கினை சேர்ந்த 19 வயதுடைய இளைஞருமே இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் இருவரையும் நேற்று முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரியின் முன்னிலையில் நிறுத்தியபோது இருவரும் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக சட்ட வைத்திய தகவல்கள் தெரிவித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் சந்தேக நபர்கள் முல்லைத்தீவு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
