புதிய வைரஸ் தொற்று : இருவர் உயிரிழப்பு, 98 பேர் தனிமைப்படுத்தலில்
மேற்கு ஆபிரிக்காவின் கானா மாநிலத்தில் எபோலா வைரஸைப் போன்றே மார்பர்க் வைரஸால் பாதிக்கப்பட்ட இருவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட குறித்த இருவரும் உயிரிழந்துவிட்டதாகவும் மேலும் அவர்கள் மார்பர்க் வைரஸால் இறந்ததாகவும் ஆய்வக அறிக்கைகள் உறுதிப்படுத்தியுள்ளன.
இதன் விளைவாக 98 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என மேற்கு ஆபிரிக்க மாநிலத்தில் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
இந்த வைரஸுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை எனவுத் தெரிவிக்கப்படுகின்றது.