
புதிய புற்களை தேடி உண்டு வரும் யானை கூட்டம்
-அம்பாறை நிருபர்-
அம்பாறை மாவட்டத்தில் யானைகள் சம்மாந்துறை ஊடாக காரைதீவு மாவடிப்பள்ளி, நிந்தவூர் பகுதிகளை ஊடறுத்து அங்குள்ள புல் இனங்களை உண்ணுவதுடன் கூட்டத்தில் உள்ள யானை குட்டிகள் விளையாடுவதையும் காண முடிந்தது.
குறித்த யானைக்கூட்டத்தை பார்வையிட மாவடிப்பள்ளி பாலம், காரைதீவு, நிந்தவூர், சம்மாந்துறை, பகுதிகளில் பொதுமக்கள் குவிந்து நின்று யானைக்கூட்டத்தை அவதானிப்பதை காணமுடிகிறது.
இப் பிரதேசத்தில் அண்மையில் வேளாண்மை அறுவடை மேற்கொள்ளப்பட்ட நிலையில் தீ வைக்கப்படுவதனாலும் அங்கு கொட்டப்படும் குப்பைகளை தினந்தோறும் 150க்கும் மேற்பட்ட யானைகள் உண்ணுவதற்கு வருகை தருவதுடன் அருகில் உள்ள பொதுமக்களின் உடமைகளுக்கும் சேதம் விளைவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
