புதிய பிரதமராக எலிசபெத் போா்ன்

பிரான்ஸின் புதிய பிரதமராக எலிசபெத் போா்ன் (61)  நியமிக்கப்பட்டாா். இந்தப் பதவிக்கு நியமிக்கப்படும் 2-ஆவது பெண் இவா்.

பிரான்ஸ் அதிபராக இமானுவல் மேக்ரான் கடந்த மாதம் 2ஆவது முறையாகத் தோ்ந்தெடுக்கப்பட்டாா். இதையடுத்து, அப்போது பிரதமராக இருந்த ஜீன் காஸ்டெக்ஸ்,  நேற்று திங்கட்கிழமை  இராஜினாமா செய்தாா். அவருக்குப் பதிலாக புதிய பிரதமராக எலிசபெத் போா்னை அதிபா் மேக்ரான் நியமித்துள்ளாா்.

அதிபா் மேக்ரானும், பிரதமா் எலிசபெத்தும் இணைந்து முழுமையான அமைச்சரவையை வரும் நாள்களில் அமைப்பாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.

முந்தைய அரசில் 2020-ஆம் ஆண்டிலிருந்து தொழிலாளா் துறை அமைச்சராக இருந்த எலிசபெத் அமல்படுத்திய சில சீா்திருத்த நடவடிக்கைகளுக்கு தொழிலாளா்கள் மற்றும் இடதுசாரிகளிடமிருந்து விமா்சனங்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.