
புதிய பாப்பரசருக்கு வாழ்த்து தெரிவித்தார் ஜனாதிபதி
கத்தோலிக்க திருச்சபையின் புதிய பாப்பரசராக தேர்ந்தெடுக்கப்பட்ட பாப்பரசர் ரொபர்ட் பிரிவோஸ்ட்டுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது ‘எக்ஸ்’ பதிவில் வாழ்த்து தெரிவித்து பதிவொன்றை பதிவிட்டுள்ளார்.
தனது பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, “உங்கள் பங்கு பெரும் பொறுப்பைக் கொண்டுள்ளது. மேலும் நீங்கள் விசுவாசிகளை வழிநடத்தும்போது உங்களுக்கு பலத்தையும் ஞானத்தையும் வாழ்த்துகிறேன்.
உங்கள் தலைமை உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு நம்பிக்கையையும் உத்வேகத்தையும் கொண்டு வரட்டும்.” என ஜனாதிபதி பதிவிட்டுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்