
புதிய பள்ளிவாசல் திறந்து வைப்பு
-மூதூர் நிருபர்-
திருகோணமலை -தோப்பூர் அஷ்ரப் பொதுவிளையாட்டு மைதானத்தில் சனபில் அல்-ஹைருல் இஸ்லாமியா-ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் அனுசரனையுடன் கட்டப்பட்ட “மஸ்ஜிதுல் வபாஹ்” பள்ளிவாயல் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை பொதுமக்கள் பாவனைக்கு திறந்து வைக்கப்பட்டு கையளிக்கப்பட்டது.
இதன் மூலம் குறித்த விளையாட்டு மைதானத்தை பயன்படுத்தும் வீரர்கள் உரிய நேரத்திற்கு தொழுகைகளை நிறைவேற்ற வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.
இதனை கொண்டுவர பாரிய பங்களிப்பு செய்த அனஸ் இர்பான் (ரஷாதி) அவர்களுக்கு தோப்பூர் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக அதன் தலைவர் ஏ.எல்.முபீர் தெரிவித்தார்.


