புதிய நெல் வர்க்கம் பரீட்சார்த்த செய்கையின் அறுவடை விழா
-கிளிநொச்சி நிருபர்-
கிளிநொச்சி மாவட்டத்தில் வறட்சியான காலநிலைக்கு செய்கை மேற்கொள்ளக்கூடிய நெல் வர்க்கமாக BG377 (வெள்ளை) நெல் வர்க்கம் பரீட்சாத்தமாக செய்கை மேற்கொள்ளப்பட்டு அதன் அறுவடை விழா புளியம்பொக்கணை பகுதியில் இன்று நடைபெற்றது.
புளியம்பொக்கணை பகுதி விவசாய போதனாசிரியர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட பிரதி விவசாயப்பணிப்பாளர் வி.சோதிலட்சுமி கலந்து கொண்டிருந்தார்.
குறித்த நிகழ்வில் கண்டாவளை கமநலசேவை நிலைய அபிவிருத்தி உத்தியோகத்தர்,பாடவிதான உத்தியோகத்தர் க.பிரதீபன், விவசாய போதனாசிரியர்கள், கமக்கார அமைப்பு பிரதிநிதிகள், பொது அமைப்பு சார்ந்தோர், அருகிலுள்ள பாடசாலை முதல்வர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.